விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட காமெடி ஷோக்களில் காமெடியனாக இருந்து, பிரபலமடைந்தவர் ராமர். இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay-tv-ramar.jpg)
நாளைய இயக்குனர் என்னும் குறும்பட போட்டியில் பங்குபெற்ற மணிராம் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஷ்ணு விஜய் இசையமைக்க, கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ‘போடா முண்டம்’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார். மேலும் இதன் டைட்டில் டிசைனையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)